Vaasippathu Eppadi / வாசிப்பது எப்படி
-
₹125
- SKU: ZD0007
- Availability: In Stock
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன் தரவீழ்ச்சியை நாம் வாழ்க்கைத்தரத்தில், சிந்தனைத்துறையில், அறிவியலில், தொழில்துறையில், கல்வித்துறையில், சினிமாவில், அரசியலில், நிர்வாகத்தில், கலைகளில் அன்றாடம் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் இஃதொரு தேசிய பிரச்சனை. அனைவருமே சேர்ந்து இதன் வேர்களை ஆராய வேண்டுமென்று விரும்புகிறேன். அனுபவத்தின் வழியாக கண்டடைந்த சில கோணங்களை இங்கு முன்வைக்கிறேன். எனக்குப் பலனளித்த சில வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இதை வாசிக்கிற ஒருவர் என்னோடு முரண்படும் புள்ளிகள் சிறந்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.
இந்த நூல் கண்டுகொள்ளப்படாமல் போவதற்குரிய அத்தனைச் சாத்தியங்களும் உண்டு. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.




